இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசையால் இளைஞர்களைக் கவர்ந்து இழுக்கும் சக்கரக்கட்டி படம் செப்டம்பர் 26 அன்று வெளியாகிறது. பாக்யராஜின் மகன் சாந்தனு ஹீரோவாகவும் கலைப்புலி தாணுவின் மகன் கலாபிரபு இயக்குநராகவும் அறிமுகமாகும் இந்தப் படம் பெருமளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
சிறிய வயதில் வேட்டிய மடிச்சுக் கட்டு படத்தில் நடிநடித்திருந்த பாக்யராஜின் மகன் சாந்தனு, சக்கரக்கட்டி மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். சாந்தனுவுக்கு ஜோடியாக வேதிகா நடித்திருக்கிறார். படத்தின் ஸ்டில்களும் இசையும் படத்தின் இளமைத் துள்ளலுக்குக் கட்டியம் கூறுகின்றன.
கலாபிரபு, சாந்தனு ஆகிய இருவருக்கும் இது முதல் படம் என்பதால் இருவருமே கடுமையாக உழைத்திருக்கிறார்களாம். ரஹ்மானின் இசையில் உருவான பாடல்கள் ஏற்கனவே பண்பலைகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக டாக்ஸி டாக்ஸி பாடல்.
இந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆனது கலாபிரபுவுக்குப் பிரச்சினையாகிவிட்டது என்று சொன்னால் நம்புவீர்களா? பாடலின் வெற்றி அப்பாடல் குறித்த எதிர்பார்ப்பைப் பெருமளவில் எகிறச் செய்துவிட்டதால் அதற்கு ஏற்பப் பாடலின் காட்சியமைப்பு இருக்க வேண்டும் என்பதால் இப்பாடலை மறுபடியும் ரிச்சாக ஷூட் செய்துள்ளாராம் கலாபிரபு.
இரண்டு இளைஞர்களின் அறீமுகமும் எப்படி இருக்கும் என்பது செப்டம்பர் 26-ம் தேதிக்குப் பின் தெரிந்துவிடும்.
|