கலைஞரின் பொன்னர் சங்கர் நாவலைப் படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தியாகராஜன். பிரசாந்த் இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். அதாவது பொன்னரும் இவரே, சங்கரும் இவரே! இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முடிவதற்குள் வருடங்கள் பல ஆகிவிடும் என்பதால், இடையில் வேறொரு படத்தைத் தயாரித்துவிட்டு பிறகு இப்படத்திற்கு வரலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம் தியாகராஜன்.
இவரே நடித்து வெற்றிகரமாக அந்த காலத்தில் ஓடிய மலையூர் மம்பட்டியான் படத்தை மீண்டும் எடுக்கப் போகிறாராம். இதில் பிரசாந்த் மம்பட்டியானாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின். முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
வின்னர் படத்திற்குப் பிறகு வடிவேலுவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்த தியாகராஜன், இப்படத்திற்காக மீண்டும் வெள்ளைக் கொடியைப் பறக்கவிட்டிருக்கிறார். வடிவேலு ஒப்புக்கொண்டாரா என்பதுதான் இன்னும் தெரியவில்லை.
|