தயாரிப்பாளர் சங்கப் படிகளில் பஞ்சாயத்து காரணமாக ஏறும் நடிகர்களில் ஒருவராகிவிட்டார் ஜெய். சுப்ரமணியபுரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு சுமார் ஏழு படங்களை ஒப்புக்கொண்ட ஜெய், இன்னும் தனது கையைக் கீழே இறக்கவில்லை. யார் போனாலும் அட்வான்சை வாங்கிக்கொள்கிறாராம். அதைவிட அதிர்ச்சி, சம்பளத்தையும் ஒரு கோடியாக உயர்த்திவிட்டாராம். சுப்ரமணியபுரம் படத்திற்கு முன்பே இவர் கால்ஷீட் கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகை. பழைய சம்பளம்தானாம். போகட்டும், நல்ல மனசு.
ஆனால், தற்போது ஒரே நேரத்தில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களுக்கு கால்ஷீட் பிரித்துக் கொடுப்பதில்தான் பிரச்சனையே என்கிறார்கள். இது தொடர்பாகத்தான் அடிக்கடி தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஜயம் செய்கிறார் ஜெய். காரணம் கேட்கும் அவர்களிடம், நான் கால்ஷீட் கொடுத்த தேதிகளில் ஷூட்டிங் வைக்காமல் அவற்றை வீணாக்கிவிட்டு வேறொரு கம்பெனிக்குக் கொடுத்திருக்கும் தேதிகளை கேட்டால் என்ன செய்வது என்கிறாராம் அப்பாவியாக.
படங்களை ஒப்புக்கொள்வதையே கொஞ்ச நாட்களுக்கு நிறுத்தி வைக்கும்படி அறிவுரைத்திருக்கிறதாம் சங்கம்.
|