ரஹ்மான் மியூசிக் வேண்டும் என்றால், கொஞ்சம் காத்திருக்கத்தான் வேண்டும். அது ஆனானப்பட்ட ரஜினியாகவே இருந்தாலும். சுல்தான் தி வாரியர் படத்திற்கு இரண்டே இரண்டு பாடல்கள் மட்டுமே போட்டுக் கொடுத்திருக்கும் இசைப்புயல், எந்திரன் படத்திற்கு 3 பாடல்கள் போட்டுக் கொடுத்து விட்டாராம்.
இது ஒரு புறம் சந்தோஷத்தைக் கொடுத்தாலும், ரஹ்மானின் செய்கை ஷங்கரையே கொஞ்சம் சங்கடப்படுத்தியிருக்கிறது. வேறொன்றுமில்லை, எந்திரனுக்கு பிறகு அப்ரோச் செய்த மணிரத்னத்தின் படத்திற்கு ஐந்து பாடல்களையும் மொத்தமாகப் போட்டுக் கொடுத்துவிட்டாராம் இசைப்புயல்.
என்னதான் இருந்தாலும், தன்னை அறிமுகப்படுத்தியவர் என்ற விசுவாசம் இல்லாமலா இருக்கும்?
|