தனம் படத்தின் இயக்குனருக்கு மட்டுமல்ல, நாயகி சங்கீதாவுக்கும் போனில் ஆபாச அர்ச்சனைகள் நடக்கிறதாம். இதனால் அதிர்ந்துபோன சங்கீதா இனி நெகட்டிவ் ரோல்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். தனம் படத்தின் வசூலைக் கருத்தில் கொண்டு ஏராளமான படங்களில் நடிக்க அழைப்புகள் வருகின்றனவாம். ஆனாலும், நான் இதுவரை நடித்த வழக்கமான (அதாவது ஏடாகூட) ரோல்களாக இருந்தால் தயவு செய்து கதை சொல்லக்கூட வராதீர்கள் என்று கூறிவிடுகிறாராம்.
விளைவு? கையில் ஒரு படமும் இல்லாமல் வீட்டில்தான் இருக்கிறார். ஆனால், தனத்திற்குப் பிறகு சம்பளத்தை மட்டும் உயர்த்தியிருக்கிறார். பதினைந்துக்கு மேல், இருபதிற்குள் தேவைப்படும் நாட்களை வைத்து கணக்கிடுகிறாராம்.
சம்பளத்தைக் கூட்டுவதற்கு மட்டும் நெகட்டிவ் ரோல் தேவைப்படுது. நடிப்பதற்குக் கசக்குதா என்கிறார்கள் அப்ரோச் பண்ணிக் கதை சொல்ல முடியாத இயக்குனர்கள்.
|