சிவாஜி புரடக்ஷனுக்கு அஜீத் கால்ஷீட் கொடுத்திருப்பதை அனைவரும் அறிவர். இப்படத்தை இயக்குவதில் விஷ்ணுவர்த்தனுக்கும் கெவுதம் மேனனுக்கும் பலத்த போட்டி. சிவாஜி புரடக் ஷன்ஸ் தரப்பே அந்த முடிவை எடுத்துக்கொள்ளட்டும் என்று ஒதுங்கிக்கொண்டார் அஜீத்தும்.
இறுதியாக கெவுதம் மேனனே இயக்கட்டும் என்று விரும்பிய தயாரிப்பு நிறுவனம், பெருந்தொகை ஒன்றை அட்வான்சாகவும் கொடுத்துவிட்டது. ஆனால் கதை சொல்ல வேண்டிய இயக்குனர் இன்று, நாளை என்று நாட்களைக் கடத்திக்கொண்டேயிருந்தார். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த நிறுவனம், இந்த வாரத்திற்குள் கதையை சொல்லாவிட்டால், நாங்கள் வேறு இயக்குனர் பார்த்துக்கொள்கிறோம் என்றார்களாம்.
சொல்லி இரண்டே நாட்களுக்குள் அவசரம் அவசரமாக சிவாஜி புரடக்ஷன்ஸுக்கு வந்த கெவுதம் மேனன், அசத்தலாக ஒரு கதையைச் சொன்னாராம். இப்போது நிம்மதியாக அடுத்த கட்ட வேலைகளை ஆரம்பித்துவிட்டது சிவாஜி புரடக்ஷன்ஸ்.
|