எவர்கிரீன் டப்பாங்குத்து 'என்னடி ராக்கம்மா' பாடல்தான். இதை ரீமிக்ஸ் செய்யப் பல படங்களில் முயற்சித்தாலும், சுந்தர் சி நடிக்கும் 'வாடா' அந்த விஷயத்தில் முந்திக்கொண்டது. ஆச்சரியம் என்னவென்றால், இந்த பாடலுக்கு திரையில் ஆடப்போகிறவர் குஷ்பு. மானாட மயிலாட நிகழ்ச்சியில் அவ்வப்போது ஆடியும் அதிர்ச்சியூட்டும் குஷ்பு. சுந்தர் சி கேட்டுக்கொண்டதால், இந்தப் பாடலுக்கு ஆடவிருக்கிறாராம்.
திரைக்குச் சம்பந்தமில்லாத இன்னொரு செய்தி இவரைப் பற்றி. சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்ட குஷ்பு, கால் மேல் கால் போட்டு அமர்வதைத் தவிர்த்தார். இதைக் கவனித்துக்கொண்டிருந்த சத்யராஜ், குஷ்பு கால் மேல் கால் போட்டு அமர்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவர் ரொம்ப உஷாராக இருக்கிறார் என்று சொல்ல, "இந்த மேடையில் சாமி சிலை எதுவும் இல்லையே?" என்றார் குஷ்பு.
அவர் எந்த அர்த்தத்தில் அப்படிச் சொன்னாரோ, அப்படி ஏதாவது சிலைகள் இருந்தால் கால்களை அப்படி வைத்திருப்பேன் என்ற அர்த்தத்தில் சொன்னதாக வம்பளக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர்.
|