பெரிய நடிகராக வேண்டும் என்று தீவிரமாக முயன்று நடிகரானவர் விக்ரம் மட்டுமல்ல. அவரது அப்பா வினோதும்தான். ஆனால் சரியான வாய்ப்பு இல்லாமல் அவரது முயற்சிகள் வீணாகிக்கொண்டிருந்தன.
இந்நிலையில் தரணியின் இயக்கத்தில் 'கில்லி' படத்தில் த்ரிஷாவின் தந்தையாக நடித்த வினோத், அதன் பிறகு பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துவிட்டார் என்றாலும் தன் மகன் விக்ரமுடன் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.
அந்தக் குறையை "கந்தசாமி' படத்தின் மூலம் நீக்கியிருக்கிறார் இயக்குநர் சுசி. கணேசன். நாயகன் விக்ரமுக்கு எதிராகச் செயல்படும் கூட்டத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் அவருடைய தந்தை வினோத்.
விக்ரமுக்கு வீட்டிலிருந்தே வில்லனா?
|