ஐஸ்வர்யா ராயின் ஜாடையில் இருப்பதால் அதை வைத்தே பிரபலமாகிவிட்ட பாலிவுட் நடிகை சினேகா உல்லாலைத் தமிழில் நடிக்க வைக்கப் பலரும் முயற்சி செய்தனர். ஆனால் சம்பளம், கால்ஷீட் முதலான காரணங்களைக் கூறி இந்த அழகி தமிழுக்கு வராமல் நழுவிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் தெலுங்கிலும் தமிழிலும் தயாராகும் "என்னைத் தெரியுமா?' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் சினேகா உல்லால். தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜ்குமார் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நடித்திருப்பதுடன் கவர்ச்சியிலும் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்திருக்கிறாராம். படம் ஹிட் ஆனால் அடுத்து தமிழில் கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறார். எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க இப்போதே அவரிடம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
எல்லாம் என்னைத் தெரியுமா படத்தின் வெற்றியைப் பொறுத்துத்தான் உள்ளது.
|