ஷக்தி சிதம்பரத்தின் அனைத்துப் படங்களிலும் தொடர்ந்து நாயகியாக நடித்து வரும் நமீதா, ராஜாதிராஜா படத்தில் நடிக்கவில்லை. ஷக்தி அவரை அழைத்தபோது, ஆறு கதாநாயகிகள் நடிக்கும் படத்தில் தனக்கு முக்கியத்துவம் இருக்காது என நமீதா மறுத்துவிட்டாராம். ஏற்கனவே நான் அவன் இல்லை படத்தில் பல கதாநாயகிகளுக்கு மத்தியிலும் மேலும் பல படங்களில் தொட்டுக்கொள்ளக் கவர்ச்சி ஊறுகாய் போலவும் பயன்படுத்தப்பட்டதில் ஏற்பட்ட வருத்தம் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஆனாலும் தன் எல்லாப் படங்களிலும் இந்தக் கவர்ச்சிப் புயலை வீச வைத்த ஷக்தி, இதிலும் நமீதா எந்த வகையிலாவது இடம்பெற வேண்டும் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. படத்தில் நடிக்கும் காம்னாவின் கதாபாத்திரத்துக்கு "நர்ஸ் நமீதா' எனப் பெயரிட்டுத் தனது சென்டிமென்டுக்குப் பங்கம் நேராமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
|