காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வது ஒரு ரகம். மார்க்கெட் உள்ளபோதே போற்றப்படுவது மற்றொரு ரகம். தமன்னா இரண்டாவது ரகம். நான் நீ என்று போட்டி போடுகிறார்கள் தமன்னாவின் கால்ஷீட்டுக்கு. ஆனாலும் நிதானமாக ஒப்புக்கொள்கிறார் ஒவ்வொரு படத்தையும்.
தனக்கும் முக்கியத்துவம் இருக்கிற மாதிரி கதைகளாக இருக்க வேண்டும். இதுதான் தமன்னாவின் எதிர்பார்ப்பு. கால்ஷீட் கொடுத்துவிட்டால் வேறெந்தக் குடைச்சலும் கொடுப்பதில்லை யூனிட்டுக்கு. இப்போது அவர் நடித்துவரும் பட இயக்குனர்கள் யாரைக் கேட்டாலும், ஒரு விஷயத்தை முதலில் சொல்லிப் பாராட்டுகிறார்கள். செட்டுக்குள் வந்துவிட்டால் தமன்னா செய்யும் முதல் காரியம் தனது செல்போனை ஆஃப் செய்வதுதானாம். அதற்கு முன்பாக அவர் செய்யும் இன்னொரு காரியம், குறித்த நேரத்திற்கு அரை மணி நேரமாவது முன்னதாகவே வந்துவிடுவது.
முதல் இடத்தைப் பிடிக்காமல் விட மாட்டார் போலிருக்கிறதே!
|