வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்

April 08, 2017, Chennai

Ads after article title

“நஞ்சில்லாத உணவு உற்பத்தி செய்ய வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால் விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறிவிடுவார்கள்.


” -வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். இன்று அவரது பிறந்த நாள். 

நெடுவாசலில் துவங்கிய போராட்டம் ஜந்தர் மந்தர் வரையில் இன்று எதிரொலிக்கிறது. இது போதாது இன்னும் பலாக ஒலிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம். மீத்தேனோ ஹைட்ரோ கார்பன்  திட்டமோ முதலில் களம் அமைத்து போராடியவர் இயற்கை விவசாயி நம்மாழ்வார். இவர் மீத்தேன் திட்டத்தை எதிர்க்கவில்லை மாறாக மீத்தேன் எடுக்க எளிய வழியை காட்டியவர்.  ஒவ்வொறு ஐந்தாண்டு தி ட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொறுவரின் வீட்டிற்கு பின்னாலேயும் சாண எரிவாயுக்கலன் போட்டு கொண்டே இருந்தால் பூமிக்கு அடியிலிருந்துகிடைப்பதைவிடவும் அதிகமாகவே மீத்தேன் கிடைக்கும் என்றவர். ஆனால் இப்படி எளிமையாக கிடைக்கும் மீத்தேன் திட்டத்தால் அரசுக்கு லாபமில்லை. 

தன் வாழ்நாள் முழுவதும் இளைஞர்களை அதிகம் நம்பியவர். இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் இளைஞர்களோடு இணைந்து போராடயிருப்பார். நெடுவாசலில் போராடுபார்களுக்கு வழிகாட்டியாக இருந்திருப்பார். அன்று அவர் விரும்பியபோது நாம் அவருக்கு ஆதரவாக இல்லை. இன்று நமக்கு அவர் உதவி தேவைபடும் வேளையில் அவர் இல்லை. ஆனால் அவர் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.  அவர் இல்லாத குறையை அவர் புத்தகங்கள் தீர்க்கும்.

வெறும் மத்திய மாநில அரசுகளை விமர்சிப்பதையும் கேலி செய்வதையும் விடுத்து இயற்கை விஞ்ஞானியின் கருத்துக்களை தெரிந்து கொண்டு போராட்டத்தை தொடர்வது தான் அவருக்கு செய்யும் 
மரியாதையாகும்.