விக்கெட்டில் சதம் போட்ட வீரர்கள் பட்டியலில் புவனேஷ்வர் குமார்

April 18, 2017, Chennai

Ads after article title

ஐதராபாத், ஏப்.18 (டி.என்.எஸ்) ஆண்டு தோறும் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் போட்டி, இந்த ஆண்டு 10 வது ஆண்டாக நடைபெற்று வருகிறது.


இதில், நேற்று நடைபெற்ற பஞ்சாப் - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஐதராபாத் வீரர் புவனேஷ்வர் குமார், 5 விக்கெட்களை வீழ்த்தி 19 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஐபிஎல் போட்டியில் அவரது சிறந்த பந்துவீச்சு இதுவாகும்.

மேலும் 5 விக்கெட் எடுத்ததன் மூலம் புவனேஷ்வர் குமார் ஐ.பி.எல்.லில் 100-வது விக்கெட்டை தொட்டார். 81 ஆட்டத்தில் 297.5 ஓவர்கள் வீசி 2078 ரன்கள் கொடுத்து 100 விக்கெட் வீழ்த்தினார்.

இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 விக்கெட்களை வீழ்த்திய 9 வது வீரராகியுள்ள புவனேஷ்வர் குமார்.

ஏற்கனவே, மலிங்கா (147 விக்கெட்), அமித் மிஸ்ரா (129), பிராவோ (122), பியூஸ் சாவ்லா (122), ஹர்பஜன் சிங் (122), ஆசிஷ் நெக்ரா (103), வினய்குமார் (101), அஸ்வின் (100) ஆகியோர் இடம்பெற்றுள்ள விக்கெட்டில் சதம் போட்ட வீரர்கள் பட்டியலில் தற்போது புவனேஷ்வர் குமாரும் இடம் பிடித்துள்ளார்.