ரூ.6 கோடி, தங்க கட்டிகள் : கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களிடம் நடந்த பேரம் அம்பலம்

June 13, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஜூனெ 13 (டி.என்.எஸ்) எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்க அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு சசிகலா அணியினர் தலா ரூ.6 கோடி பணமும், தங்க கட்டிகளையும் தருவதாக பேரம் பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து தப்பி வந்த ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுரை தெற்கு எம்எல்ஏ சரவணன் பேசிய வீடியோவை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. மேலும் நீண்ட நாட்களாக அதிமுக கட்சியில் அங்கம் வகிக்கும் கோவை சூலூர் எம்எல்ஏ ஆர்.கனகராஜ் இடம்பெற்றுள்ள வீடியோவும் வெளியாகியுள்ளது. இவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்தவர்.

ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் சசிகலா அணி 6 கோடி வரை பணம் கொடுக்க முன் வந்தது தெரியவந்துள்ளது. அவ்வளவு பணம் ஏற்பாடு செய்ய முடியாத பட்சத்தில் தங்க கட்டிகள் கொடுப்பதாகவும் கூறியுள்ளனர். காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு, நாகப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி மற்றும் எம்எல்ஏ கருணாஸ் ஆகியோர் 10 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றனர் என்றும், மற்ற யாருக்கும் 1 கோடி கூட கிடைக்கவில்லை என்று மதுரை தெற்கு எம்எல்ஏ சரவணன் கூறியுள்ளார்.