யார் இந்த தேவரடியார்கள் - நீங்கள் அறிந்திராத சில உண்மைகள்

April 11, 2017, Chennai

Ads after article title

Apr 11: ஆகம முறைப்படி கோயில்களில் ஆடலும் பாடலும் அவசியம். இதை கடமையாக சைய்தவர்கள் தேவரடியார்கள். இவர்கள் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை கற்று தேர்ந்து கோவில்களில் ஆடல்  பாடல் என மக்களை மகிழ்வித்தவர்கள்.


பக்தி, இலக்கியம் கோலோச்சிய காலத்தில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலங்களில் இவர்கள் மிகவும் மரியாதையாக நடத்தப்பட்டனர். இன்று தஞ்சை  பெரிய கோயிலில் மற்றும் பல தமிழ் கோயில்களில் காணப்படும் சிற்ப்பங்களுக்கு இந்த தேவரடியார்கள் தான் மாதிரிகளாக நின்றனர். இது மட்டும் அல்லாது கோயில்களை சுத்தமாக பராமரிக்கும் 
கடமையும் கொண்டவர்கள்.

ஆண் கலைஞர்களை நட்டுவானர்கள் என்று கூறுவர். இவர்கள் தேவரடியார்கள் ஆடுவதற்கு இசையமைப்பவர்கள். சோழர் காலத்தில் இவர்களுக்கு பெரும் கவுரவம் வழங்கி அங்கிகரிக்கப்பட்டார்கள். ஆனால், இன்று அவர்களின் நிலை என்ன? மிகவும் கீழ்த்தரமானவர்களாக சித்தரிக்கப்பட்டு,  வெறும் சதை பிண்டங்களாக நடத்தப்படுகின்றனர்.

அவர்களின் மரபு மற்றும் புகழ் அறியாத நிலையில் வாழ்கின்றனர். அக்காலத்தில் தேவரடியார்களை வீட்டு விசேஷங்களுக்கு அழைப்பர் ஆனால் இன்று குலப்பெண்கள் இறுக்கும் திசையிலும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.  

சிதைந்தது இவ்வினம் மட்டும் அல்ல, இந்த இனத்தின் அழகு தமிழ்ப்பெயரும் தான்.