மற்ற நடிகைகளுக்கு நேர்ந்த பிரச்சினை ராய்க்கு மட்டும் ஏற்படவில்லையாம்!

May 18, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 18 (டி.என்.எஸ்) லட்சுமி ராயாக இருந்தவர் தற்போது ராய் லட்சுமியாக மாறிவிட்டார் என்பது ஊர் அறிந்த ஒன்று தான்.


அதேபோல், அவருக்கு தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் எங்கும் வாய்ப்பு இல்லை என்பதும் ஊர் அறிந்தது தான். அப்படி இருந்தும், பாரீன் காரில் அம்மணி பறப்பதும், அடம்பர பங்களாவில் வசிப்பதும் என்று இருக்கிறார். அதைப் பற்றி நமக்கு எதுக்கு.

விஷயம் என்னவென்றால், சமீபத்தில் முகம் தெரியா நடிகைகளும், முகம் தெரிந்து பிறகு ரசிகர்கள் மறந்து போன லிஸ்ட்டில் உள்ள ஓல்டு நடிகைகளும், சினிமாவில் பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள். நடிகைகள் என்றாலே அதற்கு தான், என்று நினைக்கிறார்கள், என்று மாறி மாறி புகார் கொடுத்து வந்தார்கள் அல்லவா, அப்படி ஒரு புகாரை தான் ராய் லட்சுமி கூறியுள்ளார்.

ஆனால், அறிமுக நடிகைகள், முன்னணி நடிகைகள் என்று அனைத்து நடிகைகளுக்கும் ஏற்படும் இந்த பாலியல் பிரச்சினை, இதுவரை அவருக்கு மட்டும் ஏற்பட்டதே இல்லை, என்று ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது, என்று வேதனைப்பட்டுள்ள ராய் லட்சுமி, சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள், முன்னேறத் துடிக்கும் நடிகைகளை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள். சிலர் சினிமாவுக்கு வருவதே சூதாட, ஜாலியாக இருக்க, நடிகைகளுடன் படுக்க தான். அவர்களால் தான் சினிமாவின் பெயர் கெடுகிறதும், என்றும் கூறியுள்ளார்.