பிரபல இந்தி நடிகை மரணம்

May 18, 2017, Chennai

Ads after article title

மும்பை, மே 18 (டி.என்.எஸ்) இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்த ரீமா லாகு, இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.


நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட ரீமாவை அவரது குடும்பத்தார் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலன் இன்றி அதிகாலை 3.15 மணிக்கு அவர் உயிரிழந்து விட்டார். 

59 வயதாகும் லீமா லாகு, திரைப்படங்கள் மட்டும் இன்றி பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.