பார்முலா 1 : பக்ரைன் கிராண்ட்பிரியில் வெட்டல் வெற்றி

April 17, 2017, Chennai

Ads after article title

சகிரி, ஏப்.17 (டி.என்.எஸ்) உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார் பந்தயத்தின் 3 வது சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி, சகிரில் நேற்று இரவு நடந்தது.


10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள், பந்தய தூரமான 308.238 கிலோ மீட்டரை மின்னல் வேகத்தில் கடந்தனர்.

இதில், முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 1 மணி 33 நிமிடம் 53.374 வினாடிகளில் இலக்கை கடந்து, முதலிடத்தை பிடித்து 25 புள்ளிகளை பெற்றார். அவரை விட 6.6 வினாடி மட்டுமே பின்தங்கிய இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 2-வதாகவும் (மெர்சிடஸ் அணி), முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 3-வதாகவும் வந்தனர். 

போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்று வரும் செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ) 7-வது இடத்தையும், ஈஸ்ட்பான் ஒகான் (பிரான்ஸ்) 10-வது இடத்தையும் பிடித்தனர்.

இதுவரை நடந்த 3 சுற்று முடிவில் வெட்டல் 68 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹாமில்டன் 61 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் இருக்கிறார்கள்.