தீபாவுக்கு எதிராக கட்சி தொடங்கினார் மாதவன்!

April 21, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்.21 (டி.என்.எஸ்) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு எதிராக அவரது கணவர் மாதவன், இன்று புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்.


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது அண்ணன் மகள் தீபாவுக்கு அதிமுக தொண்டர்கள் தெரிவித்த ஆதரவு நாளுக்கு நாள் அதிகரிக்க, அரசியல் களத்தில் இறங்கிய தீபா, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார்.

இதற்கிடையில், தீபாவுக்கும், அவரது கணவர் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாக, திடீரென்று மாதவன் புதிய அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நிலையில், இன்று மாதவன் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா திமுக என்று தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ள மாதவன், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்த பிறகு தனது கட்சி பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

எம்.ஜெ.டி,எம்.கே, என்ற தனது கட்சி கொடியில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவத்தை மாதவன் பொறித்துள்ளார்.