டோனிக்கு ஆதரவு குரல் கொடுத்த ஆஸ்திரேலிய வீரர்

April 19, 2017, Chennai

Ads after article title

டெல்லி, ஏப்.19 (டி.என்.எஸ்) தற்போது நடைபெற்று வரும் 10 வது ஐபில் கிரிக்கெட் தொடரில் புனே அணியின் விக்கெட் கீப்பர் டோனி தடுமாறுவதை பலர் விமர்சனம் செய்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே குரல் கொடுத்துள்ளார்.


இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வார்னே, “மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தோனி ஒரு தரம் வாய்ந்த அற்புதமான வீரர். மிகச்சிறந்த கேப்டனும் கூட. மற்றவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கிறார். அவர் யாருக்காகவும், எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.