கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் - ஏன் தெரியுமா?

April 04, 2017, Chennai

Ads after article title

Apr 4: இது வெறும் பழமொழி அல்ல. இதில் விஞ்ஞானம் உள்ளது என்றால் உங்களால் நம்ப இயலுமா? மன்னர்கள் ஆட்சி காலத்தில் எழுதபடாத விதி இறுந்தது.


அனைத்து கட்டிடங்களும் கோயில் கோபுரத்தை விட சிறியதாக இருக்க வேண்டும். காரணம் அறிவீற்களா? கோபுரத்தின் உச்சியில் கலசம் வைக்கபடும். இது தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்டிருக்கும். இந்த கலசங்களில் நெல், கம்பு, கேள்வரகு, திணை, வரகு, எள், சாமை, சோளம் போண்ற தானியங்கள் கொட்டப்படும். இதன் காரணம், உலோகத்தால் ஆன கலசங்கள் மின்னல் மற்றும் இடியை தாங்க வல்லது. இன்றைய காலத்தில் மூன்று தினங்களுக்கு மேல் மழை பொழிந்தால் நமது நிலை என்னவாகும் என்று சமீபத்திய மழை உணர்த்தியது. அக்காலத்தில் மூன்று மாதங்கள் தொடர்ந்து மழை பொழியும். பயிற்கள் நாசம் அடையும். அது போன்ற நேரத்தில் கலசத்தில் உள்ள தானியங்கள் கொண்டு பயிறிடுவார்கள். மேலும், இந்த தானியங்களுக்கு பனிரெண்டு ஆண்டுகள் தான் சக்தி உள்ளது. ஆகையால் தான் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தானியங்களை குடமுழக்கு விழா என்ற பெயரில் மாற்றபடும். இது வெறும் சம்பரதாயம் அல்ல விஞ்ஞானம்.