கமல் நடத்தும் நிகழ்ச்சி - ஆரம்பித்திலேயே சறுக்கிய விஜய் டிவி

May 17, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 17 (டி.என்.எஸ்) விஜய் டிவி-யில் கமல் நடத்தும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக கமல்ஹாசனுக்கு பெரிய தொகையை விஜய் டிவி கொடுத்திருப்பதோடு, இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்கும் விஐபி-க்களுக்கும் பெரும் தொகை வழங்கப்படுகிறதாம்.


இதற்காக டிவி நிர்வாகம் தேர்வு செய்த விஐபி-க்கள் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் ஒகே சொல்லி வந்த நிலையில், ஒரே ஒரு மூத்த நடிகர் மட்டும் நோ, சொல்லி விஜய் டிவியை அதிர வைத்துவிட்டாராம். அவர் வேறு யாருமல்ல, சமீபத்தில் பா.பாண்டியாக தமிழ் சினிமாவை கலக்கிய ராஜ்கிரண்.

ராஜ்கிரணை எப்படியாவது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க வேண்டும் என்று விரும்பிய விஜய் டிவி, கமல்ஹாசன் மூலமாகவே அவரை அனுகி விஷயத்தை சொன்னதோடு, பெரிய தொகை ஒன்றையும் கொடுக்க சம்மதித்ததாம். ஆனால், எவ்வளவு பெரிய தொகை கொடுத்தாலும், விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன், என்ற கொள்கைக் கொண்ட ராஜ்கிரண், விஜய் டிவி நிகழ்ச்சியையும் அதே வரையரைக்குள் வைத்திருப்பதால், கமல் உள்ளிட்ட நிகழ்ச்சி குழுவினர் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும், முடியாது...முடியாது...என்பதை தவிர வேறு எதையும் பேசவில்லையாம்.

இதனால் சலிப்படைந்த டிவி நிர்வாகம், ஆரம்பத்திலேயே இப்படி சறுக்கிடுச்சே, என்ற வருத்தத்தில் இருக்கிறார்களாம்.