ஐபிஎல் : புனேவை வீழ்த்தியது குஜராத்

April 15, 2017, Chennai

Ads after article title

ராஜ்கோட், ஏப்.15 (டி.என்.எஸ்) ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் குஜராத் லயன்ஸ் - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதின.


 

டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 171 ரன்களை எடுத்தது. 

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் மிக்கல்லம், டுவைன் ஸ்மித் தொடக்கம் முதலே அதிரடி காட்ட, அணியின் ஸ்கோர் மளமளவௌ உயர, இறுதியில் 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டிய குஜராத் லயன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.