ஐபிஎல் : பஞ்சாப் அணியை வீழ்த்தியது கொல்கத்தா

April 14, 2017, Chennai

Ads after article title

கொல்கத்தா, ஏப்.14 (டி.என்.எஸ்) ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.


இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 170 ரன் எடுத்தது. 

அடுத்து விளையாடிய கொல்கத்தாவுக்கு கேப்டன் காம்பீர், சுனில் நரீன் நல்ல தொடக்கம் கொடுத்தனர். நரீன் 37 ரன்னும், உத்தப்பா 26 ரன்னும் எடுத்தனர். அந்த அணி 16.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து வெற்றி பெற்றது. காம்பீர் 72 ரன் எடுத்தார். கொல்கத்தா பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். பஞ்சாப் முதல் தோல்வியை சந்தித்தது.