ஐபிஎல் : பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்

April 18, 2017, Chennai

Ads after article title

ஐதராபாத், ஏப்.18 (டி.என்.எஸ்) 10 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19 வது லீக் போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.


வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது. கேப்டன் வார்னர் 54 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சர் என 70 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நமன் ஓஜா 20 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்சர் என 34 ரன்கள் எடுத்தார்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்களை எடுத்தது.  இதன் மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.