ஐபிஎல் : குஜராத்தை வீழ்த்தியது மும்பை

April 17, 2017, Chennai

Ads after article title

மும்பை, ஏப்.17 (டி.என்.எஸ்) ஐபில் கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் போட்டிகளில் ஒன்றில், மும்பை இந்தியன்ஸ் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின.


டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் லயன்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய  மும்பை இந்தியன்ஸ் அணியின் 19.3 ஓவரில் 177 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா அவுட்டாகாமல் 29 பந்தில் 40 ரன்கள் எடுத்தார்.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணிக்கு இது நான்காவது வெற்றியாகும்.