ஐபிஎல் : காம்பீர் சாதனையை முறியடித்த வார்னர்

April 18, 2017, Chennai

Ads after article title

ஐதராபாத், ஏப்.18 (டி.என்.எஸ்) ஐபில் கிரிக்கெட் தொடரில் அதிகமான அரை அசதம் அடித்த வீரர் என்ற கவுதம் காம்பீரின் சாதனையை வார்னர் முறியத்தார்.


10 வது ஐபில் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. பஞ்சாப் அணி 154 ரன்கள் எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் வார்னர் 54 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த அரைசதம் மூலம் வார்னர் ஐ.பி.எல். தொடரில் 34 அரைசதங்கள் அடித்துள்ளார். இதற்கு முன்னர் காம்பீர் 33 அரைசதங்கள் அடித்து ஐ.பி.எல். தொடரில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் காம்பீரின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை வார்னர் நிகழ்த்தியுள்ளார்.