இந்திய பெருங்கடலுக்கு அடியில் அமைதியாக உறங்கும் குமரிகண்டம்

April 11, 2017, Chennai

Ads after article title

Apr 11: லெமுரியா கண்டமும் குமரி கண்டமும் ஒன்றுதான் என்ற ஒரு கறுத்து உள்ளது. ஃரென்க் ஜோசஃ என்பவர் "The lost civilization of Lemuria" என்ற தனது புத்தகத்தில் லெமுரியா நாகரிகம் 2.


5 லட்சம் ஆண்டுகள் பழமையானது என்றும் லெமுரியா கண்டமும் குமரி கண்டமும் வெவ்வேறு நிலப்பரப்புகளே அன்றி ஒன்று அல்ல என்று கூறியுள்ளார். இதன் ரகசியம் தான் என்ன? நமது வரலாறு  20,000 ஆண்டுகள் பழமையானது. குமரி கண்டத்தில் தான் முதன் முதலில் மனிதன் பிறந்திருக்க வேண்டும் என்று அனுமானிக்கப்படுகிறது. நமது தாய் மொழியாம் தமிழ் மொழியும், நாகரிகமும், நமது  மூதாதையைர் வாழ்ந்த இடமும் இதுவே. 

ஆப்ரிக்க, ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், இலங்கை  இன்னும் சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான தமிழ் கண்டம் தான் இந்த குமரி கண்டம். தொல்காப்பியம் நூல் இயற்றப்பட்டதும் இந்த குமரி கண்டத்தில் தான் என்ற கருத்தும் உள்ளது. இன்று அமைதியாக இந்திய பெருங்கடலுக்கு அடியில் உறங்கும் இவ்விடம் பற்றி கந்த புறாணம், சிலப்பதகாரம் மற்றும் பல 
சங்க இலக்கியங்களிலும் குறிப்புகள் உள்ளன. இவை அனைத்தும் வெறும் கதைகள் அல்ல.  இந்த பிரம்மாண்டமான நிலப்பரபை பாண்டிய மன்னர்கள் ஆண்டனர். அதாவது, குமரி கண்டம் மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் இவர்கள் ஆண்டுள்ளனர். 

குமரி கண்டம் கடலில் மூழ்கிய வேளையில் இங்கு வாழ்ந்த மக்கள் வேறு பாதுகாப்பான நிலப்பரபை நோக்கி நகர்ந்து விட்டனர். நீரில் மூழ்கியது போக எஞ்சிய நிலத்தில் மக்கள் தங்கள் வாழ்வை தொடர்ந்தனர், புதிய நாகரிகங்கள் உறுவானது. கடல் குறுக்கிட்டதால் இந்த பிரம்மாண்டமான தமிழ் கண்டம் இன்று வெவ்வேறு கண்டங்களாக பிரிந்து விட்டது. உலகின் முதல் நாகரிகம் தமிழர் நாகரிகம் , முதல் மொழி தமிழ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இந்திய அகழ்வாராச்சியினர் இதன் மர்மத்தை முதலில் வெளிக்கொணர வேண்டும்.