அரசியலுக்கு தயாராகுங்கள் : ரசிகர்களுக்கு ரஜினி உத்தரவு

May 19, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 19 (டி.என்.எஸ்) ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்வை இன்றுடன் முடித்துக் கொள்ளும் ரஜினிகாந்த், அரசியலுக்கு தயாராகுங்கள், என்று தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வில் தான் அரசியலுக்கு வர தயார் என்பதை சூசகமாக தெரிவித்த ரஜினிகாந்த், கடந்த நான்கு நாட்களாக ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தற்போது புகைப்படம் எடுக்கும் நிகழ்வு இன்றுடன் முடிவடைகிறது.

இறுதி நாளான இன்று ரஜினிகாந்த் பேசிய பரபரப்பான பேச்சில் கவனிக்க வைத்தது, “எல்லாரும் அவங்க வேலை, குடும்பம் எல்லாத்தையும் கவனிங்க, அதே சமயத்தில் நாட்டுக்கு போர் வரும், அப்போது நாட்டில் உள்ள வீரர்கள் போருக்கு தாயராவர்கள், அது போல நீங்களும் தயாராகி கொள்ளுங்கள்,  நம் நாட்டை காப்பாற்ற வேண்டும்.” என்பது தான்.

அதாவது தேர்தல் நேரத்தில், தனி கட்சியுடன் தான் அரசியலில் இறங்குவேன், என்பதை தான் ரஜினிகாந்த் சூசகமாக தெரிவித்துள்ளார்.