தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
(1) ஜி கிருஷ்ணன் (சென்னை)

கேள்வி: வைகோ என்ற பெயர் ஆங்கிலத்தில் vaiko-வா அல்லது vaigo-வா?

பதில்: தமிழில் ko என்பதற்கும் go என்பதற்கும் "கோ" என்ற ஒரே எழுத்துத்தான். கருணாநிதியை பொறுத்தவரையில் அவர் Vaigo. இப்போது மறைமுகமாக, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாநிலங்களவைத் தேர்தலில் மதிமுக நிற்கப்போவதில்லை என்று அவர் அறிவித்துவிட்டதால் இந்த கணத்தில் கருணாநிதிக்குக்கூட அவர் தம்பி வைகோ-வாகவே காணப்படுவார்.

(2) ராமன் (சென்னை)

கேள்வி: உடும்புப் பிடி என்றால் என்ன?

பதில்: ஹாக்கி தகுதிப் போட்டியில்கூட தோல்வியுற்றபோதிலும் இந்திய ஹாக்கி சம்மேளன தலைவர் பதவியிலிருந்து விலகமாட்டேன் என்று பதவியை பிடித்துக் கொண்டு இருக்கிறாரே அதுதான்.

(3) வடிவேலு நாயகம் (சென்னை)

கேள்வி: ஒரு யானையை சிரிக்க வைக்க முடியுமா?

பதில்: ஏன் முடியாது? அதன் காதருகே சென்று சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றப்போகிறார்கள் என்று சொல்லிப்பாருங்கள்.

(4) வேல்முருகன் (குரோம்பேட், சென்னை)

கேள்வி: இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.....இக்காலத்துக்கு பொருந்துமா..?

பதில்: ஏமாந்த சோணகிரி என்ற பெயர் வரவேண்டும் என்றால் இந்த குரளை பின்பற்றுங்கள்.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்த பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் March 17th, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 

Copyright © 2009, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera