|
(1) வேல்முருகன் (சென்னை) கேள்வி:
இப்போதெல்லாம் கொடி இடை நடிகைகளை அதிகம் பார்க்க
முடிவதில்லையே ஏன்?
பதில்: மெல்லினத்திற்கும்,
வல்லினத்திற்கும்தான் அதிக கிராக்கி.
(2) பாக்யஸ்ரீ (சென்னை)
கேள்வி: சுயசரிதை எழுத என்ன தகுதி வேண்டும்..?
பதில்: பிறந்துவிட்டாலே போதுமே.
(3) சரகுநாதன் (பாளையங்கோட்டை)
கேள்வி: இந்தியாவுக்கு ஹாக்கி தேவைதானா..?
பதில்: இந்தியாவுக்கு ஹாக்கி தேவையோ, இல்லையோ
இனிமேல் ஹாக்கிக்கு இந்தியா தேவையில்லை.
(4) பாஷா (சென்னை)
கேள்வி: இடியாப்ப சிக்கல் என்றால் என்ன..?
பதில்: ஜீரணிக்கக்கூடிய சிக்கல்
குறிப்பு: உங்களுடைய கேள்வியும் இந்த
பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். சுவையான பதில்களை
பெறுங்கள். |