தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
(1) ரங்கநாதன் (ஹைதராபாத்)

கேள்வி: சிறந்த நாடகத்தின் தன்மை எப்படி இருக்கவேண்டும்?

பதில் : இப்போது கனகசபையில் நடந்தேறியதே, தீட்சிதர்களும், ஓதுவார்களும் பங்குபெற்ற நாடகம்... அதுதான் சிறந்த நாடகத்திற்கு எடுத்துக்காட்டு. இந்த நாடகத்தில் இருதரப்பினருமே ஈரோக்கள். வில்லன் கிடையாது. முதல் நாள் அன்று தேவாரம் பாடக்கூடாது என்கிறார்கள். அரசு எச்சரிக்கிறது. தேவாரம் ஓதுவோரை சால்வை அணிவித்துக் கெளரவிக்கிறார்கள். அங்கு கொலுவீற்றிருக்கும் சிவபெருமான்கூட நடனம்தான் ஆடினார். இவர்கள் நாடகமே ஆடிவிட்டார்கள்.

(2) கண்ணன் (சிகாகோ)

கேள்வி: இரு நாவுக்கரசு என்றால் என்ன..?

பதில் : பாரத ரத்னா விருதை வாஜ்பேயிக்கு வழங்கவேண்டும் என்று அத்வானி கோரியபோது.. அது தமது காதில் விழாதது போல இருந்த மனமோகன்சிங், இப்போது வாஜ்பேயி இந்திய அரசயிலின் பீஷ்மபிதாமகர் என்று கூறியிருக்கிறாரே........ இதைவிட இருநாவுக்கு என்ன இலக்கணம் வேண்டும்..?

(3) ரகுநாதன் (சென்னை)

கேள்வி: ஆசைக்கும், பேராசைக்கும் என்ன வித்தியாசம்..?

பதில் : மாநிலங்களவைக்கு திமுக-விலிருந்து இரண்டு வேட்பாளர்கள். காங்கிரஸ் இரண்டு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு வேட்பாளர் வெற்றி பெறவேண்டும் என்று கருணாநிதி நினைப்பது ஆசை. இவர்களை தேர்ந்தெடுக்க பாமக-வும் ஒத்துழைக்கவேண்டும் என்று நினைப்பது பேராசை.

question@chennaionline.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் Published on 6th March, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 

Copyright © 2009, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera