தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
பற்கள் பேண தங்க விதிகள் நலமோடு வாழக
ஜே ஜி கண்ணப்பன்  

பற்கள் பேண தங்க விதிகள்

பல் சொத்தை, பயோரியா (பற்கறத் திசு நோயினால் பற்களில் அசைவு ஏற்படும்) போன்ற நோய்கள் வராமல் தடுக்க வாயைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளவேண்டும்.

காலையிலும், இரவு படுக்கப்போகும் முன்பும் நவீன நார்த்துரக்கி (பிரஷ்) பற்பசை கொண்டு பல் துலக்கவேண்டும்.

புளோரைடு கலந்து பற்பசை உபயோகிப்பது நல்லது. குறிப்பாக குழந்தைகளக்க புளோரைடு கலந்த பற்பசை சிறப்பானது.

பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பத மிகவும் அவசியம். தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான ஊட்டச் சத்து அடங்கியுள்ளது. குழந்தையின் முகம்-தாடை- வளர்ச்சிக்கு ஏதுவாக வளரும் பற்களுக்கு நோய் வராமல் தடுக்கும் சக்தியைத் தாய்ப்பால் கொடுக்கிறது.

பற்களில் ஒட்டிக் கொள்ளக்கூடிய வெண் சர்க்கரை கொண்ட மிட்டாய் - சாக்லெட் - ஐஸ்கிரீம் போன்றவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. இது குழந்தைகளின் பற்களைத் துரிதமாக அரித்துவிடும்.

காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், தானியங்கள் பருப்பு வகைகளைக் கொடுத்து வந்தால் வளரக்கூடிய குழந்தைகளுக்குப் பற்களின் வளர்ச்சி முழுமையாகவும், நிறைவாகவும் இருக்கும்.

எந்தெந்த காய்கறிகளை அல்லது கீரைகளை சமைக்காமல் சாப்பிட முடியுமோ அவற்றை மென்று சாப்பிடவேண்டும். அவை பற்களுக்கு பயிற்சி அளிப்பது மட்டும் அல்லாமல் உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது. எரிபொருளும் மிச்சமாகும்.

சாப்பிட்ட பின்பு வாய் நிறைய நல்ல தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியே அந்த தண்ணீரால் வாயைக் கொப்பளித்து விழுங்கவேண்டும். துப்பக்கூடாது. இதனால் வாய் சுத்தமாகும்.

ஒவ்வொரு முறையும் சாப்பாட்டுக்குப் பின்பு ஒரு தேங்காய் துண்டையோ அல்லது ஒரு கேரட்டையோ நன்றாக மென்று சாப்பிடவேண்டும். இதனால் பற்களின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத் துகள்கள் நீங்கி பற்கள் இயற்கையாகவே சுத்தம் அடைந்துவிடுகின்றன.

பற்கள் மத்தியில் உணவுப் பொருள் சிக்கிக் கொள்ளும்போது அவற்றை எடுக்க பல்குச்சி (Tooth Pick)யை உபயோகிப்பதால், நம் பற்களுக்கும், ஈறுக்கும் பாதிப்பு உண்டாகிறது. பல் குச்சிக்குப் பதிலாக 'டென்ட்டல் பலாஸ்' (Dental Floss) எனும் நூலை பயன்படுத்தலாம். இதனால் பற்களுக்கும் ஈறுகளுக்கும் எந்த பாதிப்புமின்றி சிக்கிக்கொள்ளும் உணவுப் பொருட்களை சுலபமாக அகற்றலாம்.

வாயின் இருபுறமும் சமமாக மென்றுச் சாப்பிடுவது நன்று.

புகையிலை, பான்பராக், குட்கா போன்ற பழக்கம் வேண்டாம். இப்பழக்கத்தால் வாய்ப்புற்று நோய் வரும். மிளகாய் வாய்புற்று ஏற்படுத்தும்.

அதிக சூடான உணவுகள் - பானங்களையோ அல்லது அதிக குளிர்ச்சியானவற்றை தவிர்ப்பது நல்லது.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொண்டால் பற்கள் கெடுவதில்லை. உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஆகையினால், மக்களாகிய நாம் நமது உடலையும், உருவத்தையும் வளர்த்து உள்ளத்தை பெருக்கி வளமுடன் வாழ, வாழ்க்கையில் வெற்றிபெற அடிப்படை முக்கியமான பற்களை பேணுவோம்.

'பிணியேயறியோம்' இன்பமான வாழ்க்கை பெறுவோம

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிற்கு இவ்வைந்து - குறள்

மேலும் April 21st, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 

Copyright © 2009, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera