தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
உடல் நலத்திற்கு பற்கள் நலமோடு வாழக
ஜே ஜி கண்ணப்பன்  

மழலையரின் பற்கள்

பிறந்த குழந்தைகயின் வாயில் பற்கள் இருப்பதில்லை, தாடையின் உள்ளே உருவாகும் பற்கள், குழந்தையின் பரிமாண வளர்ச்சியின் சார்பாக சுமார் 6 மாதம் முதல் 15 மாதங்கள் வரை முதல் பால் பற்கள் முளைக்க ஆரம்பிக்கின்றன. சுமார் 20 மாத அளவில் எல்லா பால் பற்களும் வாயினுள் முளைத்துவிடும். இதுவரை தாய்பால் பெற்று வளரும் குழந்தை, இனி திட உணவு ஏற்றுக் கொள்ள இந்த பற்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். மழலை மொழி நீங்கி சாதாரண பேச்சு மொழி வளரவும், பால் பற்கள் உதவுகின்றன.

முதல் பற்கள் முளைக்கும்போது, சில குழந்தைகள் உடல் தளர்ச்சியாகவும், இளகிய மலம் கழிப்பதாகவும், உடல் சூடாகவும் இருக்கும். இதனை ஆங்கிலத்தில், "Teething Trouble" அதாவது "முதற் பற்கள் முளைக்கும் பாதிப்பு" என்பார்கள். இதற்கு முறைப்படி வைத்தியம் செய்தால் போதும்.

பால் பற்கள் விழுந்து புதுப்பற்கள் முளைப்பதனால், பலர் "பால் பற்களுக்கு அக்கறை ஏன்?" என்பார்கள். நிரந்தரப் பற்களுக்கு ஆரோக்கியம் வழங்க பால் பற்கள் நன்றாக பேணப்படவேண்டும். மேலும் சிசு பிராயத்திலிருந்து வாலிப பருவம்வரை, சீரான முக வளர்ச்சிக்கு பால் பற்கள் தேவை.

மேலும் April 10th, 2008


Recommend this page

Mail us your feedback

 

 

மேலும்
 

Copyright © 2009, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera