தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  Personality
 in
   
 
 
 
 
 
இந்த வார பிரபலம்...தொடர்ச்சி (3)
video

Part I   Part II

Sivakumarராமகிருஷ்ணன்: திருவடிசூலம் கிராமத்தில உங்கள் அனுபவம்...?!

சிவகுமார்: என்னுடைய காலகட்டத்துல ஒரு நடிகர். நான் பேர் சொல்ல விரும்பல. ஜுலியஸ் சீசர் வேடத்தில் நடித்தார். ஜுலியஸ் சீசர் உட்பட ரோமாபுரியில் யாரும் மீசை வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அந்த நடிகர் மீசை வைத்துக் கொண்டே ஜுலியஸ் சீசராக நடித்தார். புத்தர் என்றால் அவருக்கு ஒரு வடிவம் வைத்திருக்கிறோம்.



அந்த வடிவத்தைப்போல நாம் நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும். ஏசுநாதர் என்றார் ஒரு வடிவம் நம்கண் முன் தோன்றும். தாடி வைத்துக் கொண்டுதான் இருக்கவேண்டும். அதை அகற்றிவிட்டு நடிக்கக் கூடாது.

ஆனால் அந்த நடிகர் மீசை வைத்துக் கொண்டே ஜுலியஸ் சீசராக நடித்தார். இப்படிப்பட்ட காலகட்டத்தில் ஒரு நடிகர், நான் அந்த படத்தில் நடிக்கும்போது.............. திருமங்கை மன்னன் என்று ஒரு அரசர். அவர் தன்னிடம் உள்ள சொத்துக்கள் பணம் எல்லாவற்றையும் போட்டு விஷ்ணுவைக்கு கோயில் கட்டுகிறார். பணம் போதவில்லை. பக்கத்து அரசர்களிடம் போய் கேட்கிறார். யாரும் கொடுப்பாரில்லை. திருடியாவது வந்து கோயில் கட்டலாம் என்று இரவு நேரத்தில் கள்ளர் வேஷம் போட்டு பணம் திருடிக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த வழியில் திருமண கோஷ்டி ஒன்று வருகிறது. அந்த கொள்ளைக்கார மன்னன் அவர்களை பாதையில் மடக்கி நிறுத்துகிறான். அத்தனை பேரின் அணிமணிகள் கழற்றப்பட்டு கொள்ளையன் முன்பு குவிக்கப்படுகிறது. மணமகனின் காலில் மெட்டி என்று சொல்லப்படும் ஆழி ஒன்று மட்டும் கழற்றப்படாமல் இருப்பதை மன்னன் பார்த்துவிடுகிறான். மணமகனாக வந்ததோ, மகாவிஷ்ணு. காலில் ஆழி மின்னுகிறது கழற்ற மனம் வரவில்லையோ என்று மன்னன் கேட்கிறான்.

கொள்ளைக்கார ராஜா தன் கையினால் கழற்றப்பார்க்கிறார் முடியவில்லை. அப்போது காலில் தன் வாயை வைத்து பல்லினால் கடித்து கழற்றுவது போல அந்தக் காட்சி வரும். நான் ஒரு சாதாரண நடிகன். அவர் சிவாஜி கணேசன். உலகத்திலேயே மிகப்பெரிய நடிகர்.

திருவடிசூலம்இடம் எப்படி என்றால், மக்கள் காலைக்கடன்களை முடித்து அந்த இடமே அசிங்கமாக இருக்கும். சிவாஜிகணேசனுக்கு இருந்த செல்வாக்கிற்கு அவர் என்ன பண்ணியிருக்கலாம் என்றால்,........... எத்தனை பேர் புராணம் படித்திருப்பார்கள்? திருமங்கை வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? பத்து பேருக்கு தெரிந்திருக்கலாம். அவர்களும் திரைப்படக் கொட்டகைக்கு வரப்போவதில்லை.

காட்சியின் கடைசி கட்டம் படமாக்கப்படவிருந்தது. கேமரா ஓடிக் கொண்டிருந்தது. கொள்ளைக்காரன் வேடத்திலிருந்த சிவாஜி கணேசன் மடார் என்று மண்டியிட்டு அந்த புதுமுக நடிகரின் (எனது) காலை தூக்கி தன் முழங்கால் மீது வைத்து கைகளால் ஆழியைக் கழற்ற முயன்றார். முடியவில்லை. மின்னல் வேகத்தில் பாதத்தை மேலே தூக்கி கால் விரலை வாய்க்குள் விட்டு கடித்து ஆழியைக் கழற்றிவிட்டார்.

தொழிலுக்காக எந்த எல்லைக்கும் இறங்கி அற்புதமாக நடிக்கக்கூடிய மிகப்பெரிய நடிகர் அவர்.

ராம:எஸ் வி சுப்பையாவை பற்றி...?

சிவ: சிவாஜி அபரிமிதமான ஒரு நடிகர். உலகத்தில் ஒரு பத்து மிகச் சிறந்த நடிகர்கள் எல்லா வேஷமும் தாங்கக்கூடிய நடிகர். எந்த வேஷமும் போடக்கூடிய முகம் உள்ள ஒரு நடிகர். எல்லா தமிழ் உச்சரிப்பிற்கும் ஏற்ற நடிகர். நல்ல பாடி லாங்குவேஜ் கொண்ட நடிகர். அவருக்கு இணையாக இந்தியாவில் யாரையும் நான் சொல்லமாட்டேன்.

உலகத்திலேயே ஐந்து பேர் என்றால், அதில் அவரும் ஒருவர். எல்லா வகையிலும் சிவாஜிக்கு இணையா நான் எந்த நடிகரையும் சொல்ல மாட்டேன்.

அவரை விடவும் இயற்கையா நடிக்கக்கூடிய ஒரு நடிகர்னா எஸ் வி சுப்பையாதான் சார். வேலைக்காரன்னு ஒரு படம் வந்துச்சு. அந்த படம் பார்த்தா தெரியும்.

பார்த்திபன் கனவுல ஒரு கேரக்டர் பண்ணுவாரு. கப்பலோட்டிய தமிழன்ல பாரதியார் வேடம். பாரதியார் எப்படி இருந்திருப்பாரோ, அப்படியே நடிச்சிருப்பாரு. அந்த கேர்கடர்குள்ளேயே வாழக்கூடிய ஒரு அற்புதமான நடிகர் அவர். நடிப்பது வேறு அந்த கேரக்டராக வாழ்வது வேறு. அவர் உணர்ச்சி வசப்பட்டார்னா.... விசித்திரமா நடந்துக்குவார்.

சாமி மேல கோவிச்சக்கிட்டு ஒருநாளு, திருப்பதி ஏழுமலையான்கிட்ட சொன்னாரு..... ஏலே நான் வரேண்டா. உன்ன நேரில வந்து பார்க்கிறேண்டா என்று கூறி நடந்தே போக ஆரம்பிச்சாரு. வெறும் ஆப் டிராயர் போட்டுகிட்டு, தோளில் ஒரு துண்டை போட்டுட்டு நடையைக் கட்டினார். யாரும் தன்னுடன் வரக்கூடாது அப்படீன்னு உத்தரவு போட்டு விடிய விடிய நடந்து போனாராம்.

மறுநாள் காலைல ஒரு எட்டு மணிக்கு நகரிக்கு பக்கத்துல ஒரு சின்ன டீக்கடையில உக்காந்து டீ சாப்பிட்டுகிட்டு இருந்தாராம். இந்த அம்மாவந்து ஒரு கார் எடுத்துக்கிட்டு போய் ஐயா எங்க இருக்கார்னு பார்த்துவிட்டு வான்னா, ............. போடா நீ போடா என்று துரத்திவிட்டார். ............. பழையபடி இவர் நடந்தே திருப்பதி போய் சாமி கும்பிட்டிருக்கிறார். அப்படி வித்தியாசமான ஒரு ஆள்.

யூனிட்ல எல்லாரும் சாப்பிட்டுட்டு இருப்பாங்க. அப்ப என்ன பண்ணுவாரு...

டிரைவரு, பாத்திரம் பண்டம் கழுவுற பொம்பளைங்க எல்லாரும் சாப்பிட்டு முடிச்சவுடனே, தடார்னு உள்ளே புகுந்து பத்து எச்சி இலைகளை எடுத்துட்டு போவாரு.

ஐயா ஐயா ஐயா அப்படீன்னா........... தான் என்கிற அகந்தை மனிதனுக்கு உள்ள இருக்கும். அதுபோகணும்னா அப்பப்போ இப்படி ஏதேனும் செஞ்சிட்டு இருக்கும் அப்படீ என்பார். ஒரு வித்தியாசமான ஆள் அவர்.

Part I   Part II

V i d e o s

More Interviews August 21st, 2008

Previous:    Interview of the week: DR. V MOHAN


More Interviews
Flowers - Many Congratulations R

Online Homeopathy Consulting!
BSE/NSE Live
Horoscope with 10 Year's Prediction
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera