தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  Personality
 in     
 
 
 
இந்த வார பிரபலம்: சிட்டி யூனியன் வங்கியின் செயல் இயக்குநர் காமகோடி. Interview of the Week
   

video

ராம - நீங்களும் வங்கியில் சேர்ந்தபோது மனித ஆற்றல் அதாவது ஊழியர் நிர்வாகத்தைத்தான் கவனித்துக் கொண்டீர்கள்?

காம - 2004 ஜுன் முதல் 2005 அக்டோ பர் வரையில் மனித ஆற்றல் மேம்பாடு மற்றும் திட்டமிடுதல் துறைகளை கவனித்து வந்தேன். அதற்கு பிறகு கடன் வழங்கும் துறையில் பொது மேலாளராக இருந்தேன். அவர் வகுத்த பாதையில் அவர் பின்பற்றிய கொள்கையில் தொட்ர்ந்து செயலாற்றி, அதற்கு எந்த பாதகமும் வராமல் பார்த்துக் கொள்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

ராம - கலை கலாச்சார துறைகளை உங்களது வங்கி பெருமளவுக்கு ஊக்குவித்து வருகிறது. அந்த ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

காம - அந்த காலத்தில் கலைகளை மன்னர்கள் போற்று பாதுகாத்து வந்தார்கள். ஜனநாயக முறை ஏற்பட்டபோது கலைகளை ஊக்குவிப்பதில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிறுனங்கள் நிரப்பவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கும்பகோணத்தில் அத்வைத சபா என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. 100 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு அமைப்பு இது.

இதற்கு நாங்கள் உதவி வருகிறோம். எங்கள் கொள்கை என்னவென்றால் மற்றவர்கள் எல்லோரும் ஆதரவு கொடுக்கும் நிறுவனங்களை நாங்களும் ஆதரிக்கவேண்டும் என்ற எண்ணம் கிடையாது. எந்தெந்த நிறுவனங்கள் நமது கலை கலாச்சாரத்தை போற்றிப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தும்கூட பணவசதி இல்லாமல் சிரமப் படுகின்றனவோ அப்படிபட்ட நிறுவனங்களுக்கு உதவவேண்டும் என்று விரும்பி வந்திருக்கிறோம்.

கர்நாடக சங்கீதத்தை பொறுத்தவரை அதற்கு போதுமான அளவுக்கு நிறுவனங்களின் ஆதரவு இல்லாமல் இருந்ததால் நாங்கள் அந்த வகையில் உதவி செய்ய முற்பட்டோ ம். உதாரணமாக திருவையாறு, தியாகராஜர் ஆராதனைக்கும் எங்கள் வங்கிக்கும் கிட்டத்தட்ட 20, 25 ஆண்டுகால உறவு இருந்து வருகிறது.

எங்களது வங்கியின் தலைமையிடம் திருவையாற்றிற்கு அருகே இருப்பது என்பது ஒரு காரணம்.

சென்னையிலும் பல சபைகளுக்கு பெரிய அளவில் இல்லை என்றாலும், முடிந்த அளவுக்கு செய்து வருகிறோம். 4, 5 ஆண்டுகளாக கிருஷ்ணகான சபாவில் நாம சங்கீர்த்தன விழா நடத்தி வருகிறோம்.

இது ஒரு இயக்கமாக மாறியுள்ளதில் எங்கள் வங்கிக்கும் ஒரு பங்கு உண்டு.

எந்தவொரு நிறுவனத்திற்கும் சமூகப் பொறுப்பு உண்டு என்ற அடிப்படையில் நாங்கள் இதை மேற்கொண்டு வருகிறோம்.

ராம - தனிப்பட்ட முறையில் உங்களுக்கு இசையிலும், நாம சங்கீர்த்தனத்திலும் ஈடுபாடு எப்படி ஏற்பட்டது?

காம - இதற்கு முக்கியமான காரணம் நான் வளர்ந்த சூழல்தான். கிராமத்தில் நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் நாட்களில் தொடர்ந்து இசை விழாக்கள் நடந்து கொண்டிருக்கும்.

காலையில் எட்டரை மணியிலிருந்து ஒன்பதரை மணிவரை எல்லா வீடுகளிலும் திருச்சி நிலையம் ஒலிபரப்பும் இசை நிகழ்ச்சி, வானொலிப் பெட்டியில் ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த சூழலிலிருந்து அங்கிருக்கும் எவருமே தப்பிக்க முடியாது. அதனால் அதன் தாக்கம் இருந்ததால் சிறுவயதிலிருந்தே இதில் ஆர்வம் ஏற்பட்டது.

தமிழ் இலக்கியம் என்று எடுத்துக் கொண்டால், தி ஜானகிராமனை நாங்கள் ரசிக்கும் அளவுக்கு நீங்கள் ரசிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். அந்த தலைமுறைக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த பெரும்பாலான எழுத்தாளர்கள் தஞ்சாவூர் பக்கத்திலிருந்து வந்திருந்ததால் அவர்களது படைப்புக்களை நாங்கள் பெருமளவுக்கு ரசிக்க முடிந்தது. அடுத்த தலைமுறையினால் இது சாத்தியமாகுமா என்பது சந்தேகமே. எங்களைப் பொறுத்தவரையில் காவிரியில் நிறைய குளித்துவிட்டோ ம். நிறைய நீச்சல் அடித்து விட்டோம்.

கிராமத்தில் வளர்ந்ததால் எங்களுக்கு பல வாய்ப்புக்கள் இருந்தன. அடுத்த தலைமுறையை எண்ணிப்பார்த்தால் கவலைக்கிடமாகவே உள்ளது.

ராம - உங்களுக்கு ஏதேனும் கனவு அல்லது லட்சியம் இருக்கிறதா?

காம - அப்படி எதுவும் இல்லை. அந்தந்த கால கட்டத்தில் கடவுள் நம்மிடம் எந்த பொறுப்பை ஒப்படைத்திருக்கிறாரோ அதில் முழு மூச்சாக ஈடுபட்டு எந்தவித குறைபாடும் இல்லாமல் நம்மால் முடிந்த அளவுக்கு செய்து முடிக்கவேண்டும் என்பதே எனது எண்ணம்.

இந்த வங்கியில் இப்போது பணியாற்றுகிறேன் என்றால் எனது முழு கவனத்தையும், முழு ஆற்றலையும், உழைப்பையும் இதற்காகவே கொடுத்து பங்கு பணியாற்றவேண்டும் என்பதே எனது அவா.

எனது தந்தையைப் பொறுத்தவரை நீண்ட காலத்திற்கு திட்டம் போடுவது என்றால் அவருக்க கோபம் வந்துவிடும். கையில் ஒரு விளக்கை ஏந்திக் கொண்டு போனேமேயானால் நம்முன் பத்து மீட்டர் அல்லது 20 மீட்டர் தூரத்தில் இருப்பவைதான் தெரியும். 4 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதை கை விளக்கைக் கொண்டு பார்க்க முடியாது.எல்லாவற்றையும் சேர்த்து குழப்பிக் கொள்ளாமல் அந்தந்த நேரத்தில் செய்யவேண்டியதை செய்து முடிக்க வேண்டும் என்று கூறுவார்.

ராம - காமகோடி என்ற பெயர் எப்படி உங்களுக்கு வைத்தார்கள்?

காம - தஞ்சாவூரில் கும்பகோணத்தைச்சுற்றியுள்ள கிராமங்களுக்கும், காஞ்சி மடத்திற்கும் நிறைய தொடர்புகள் உண்டு. 100, 150 ஆண்டுகளுக்கு காஞ்சி மடத்தின் தலைமையிடம் கும்பகோணத்தில்தான் இருந்தது. அந்த சமயத்தில் மடத்திற்கும் சுற்று வட்டார கிராமங்களுக்கும் நிறையத் தொடர்புகள் இருந்தன.

பரமாச்சாரியார் காலத்தில் முத்ராதிகாரி என்ற முறையை கொண்டு வந்தார்கள். அதாவது ஒவ்வொரு கிராமத்திலும் ஒருவர் காஞ்சி மடத்தின் பிரதிநிதியாக இருப்பார். அதில் முதல் கிராமம் திப்பிராஜபுரம். முதலில் முத்ராதிகாரியானவர் எனது பாட்டனாரின் அண்ணா. பிறகு எனது பாட்டனார்.

இதன் காரணமாக எனக்கு காமகோடி என்று பெயரிட்டார்கள்.

ராம - உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி

Previous Page

video

ஹெச் ராமகிருஷ்ணன்

More Interviews June 6th , 2008


Recommend this page

Mail us your feedback

More Interviews

Copyright © 2010, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera